2023 சர்வதேச சிறுவர் தினத்தை நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறுவர்களுக்கான விசேட ஈடுபாட்டு நிகழ்வுகளுடன் அமானா வங்கி கொண்டாடியது. தனது கிளை வலையமைப்பினூடாக, பாடசாலைகள், முன்பள்ளிகள், அநாதை இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. அமானா வங்கியின் கிளைகள் அமைந்திருக்கும் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களுடன் களிப்பூட்டும் தின நிகழ்வுகள், விளையாட்டுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கொண்டாடியது.
களிப்பூட்டும் அம்சங்களுக்கு மேலாக, சிறுவர்கள் மத்தியில் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் அமானா வங்கி உணர்த்தியிருந்தது. உறுதியான நிதிசார் அடித்தளம் என்பது, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அத்தியாவசியமானது எனும் நம்பிக்கையின் அடிப்படையில், சிறுவர்கள் மத்தியில் சேமிப்பின் பெறுமதியை உணர்த்துவதற்கும், பொறுப்பு வாய்ந்த நிதிசார் முகாமைத்துவத்தை கொண்டிருப்பது பற்றிய தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருந்தது.
அமானா வங்கியின் சிறுவர் சேமிப்பு கணக்கினூடாக, சிறுவரின் சேமிப்பு பழக்கம் இளம் வயது முதல் ஊக்குவிக்கப்படுகின்றது. புதிதாக பிறந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ரூ. 1000 பெறுமதியான சேமிப்பு வவுச்சர்களை வழங்குவது, Daraz உடன் இணைந்து உங்களின் கணக்கு மீதி வளர்ச்சியடைவதற்கேற்ப வெகுமதிகள், போனஸ் நிலையான ஆணை வெகுமதிகள் மற்றும் கல்விசார் சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையில் வெகுமதிகள் போன்றன அடங்கலாக பல வெகுமதிகளையும் வழங்குகின்றது.