கத்தாரில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்திய கத்தார் வாழ் ஆளுமைகளை கெளரவிக்கும் ஸ்கை தமிழ் விருது- 2023 ஆனது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித்தின் தலைமையில் இந்திய கலாசார மையம் அசோகா ஹோலில் நடைபெறவுள்ளவுள்ளது.
இவ்விருது விழாவில் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீனும் கௌரவ அதிதியாக இந்திய கலாச்சார மையத்தின் பொதுச் செயலாளர் மோகன் குமாரும்,
சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரும், இலங்கை தேசிய பத்திரிகையான தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவரும், இந்தியாவில் இருந்து தி.மு.க கழக சட்ட திட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகரனும், இந்தியா சேது தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைவர் முஹம்மது ஜலீலும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் இவ்விழாவில் அதிதிகளாக ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிறுவன முதல்வர் டாக்டர் றிஷான் ஜெமீல், யாழினி டிரேடிங் உரிமையாளரும் பிரபல தொழிலதிபரான யாழினி குமார், கத்தார் தமிழர் சங்கத்தின் நிறுவனரான டாக்டர் துரைசாமி குப்பன், கத்தார் தமிழர் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயன் பாபுராஜ், கத்தார் தமிழர் சங்கத்தின் தலைவர் மணி பாரதி, கத்தார் எழுமின் அமைப்பின் தலைவரான சக்திவேல் மகாலிங்கம், தமிழ்மகன் அவார்ட்ஸ் குழு தலைவர் சாதிக் பாட்சா சம்சுதீன், கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கௌரி சங்கர் மற்றும் கத்தார் முத்தமிழ் மன்றம் நிர்வாக குழு உறுப்பினர் குரு ஸ்ரீ, ADDONit நிறுவனத்தின் பணிப்பாளர் ஷாஹித் சராபத் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இவ்விழாவில், கல்வி, கலை,
விளையாட்டு, வணிகம், சமூக செயற்பாடு, ஊடகத்துறை, எழுத்து துறை மற்றும் இலக்கியத்துறை போன்ற துறைகளில் சாதித்தோருக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தகவல் கட்டாரில் இருந்து- ராஜு ராஜயோகன்