உன்னை பெற்றதால்
அன்னையான
‘அம்மா’ நான்!
உன்னை எனக்குள்
வைத்துக்கொண்டதால்
வாய்மையான
தாயே நான்!
பாசமும் நேசமும்
எனக்குள்ளிருந்தல்லவா
பிறக்கின்றன!
மனிதமும் புனிதமும்
என்னாலல்லவா
மலர்கின்றன!
அன்பும் பண்பும்
என்னால்தானே
வளர்கின்றன!
உத்தமனாய்
வித்தகனாய்
இந்த உலகில் நீ
உலா வருவதற்கு
வித்திட்டவள்
தாய் நானல்லவா!
தாய்
நானில்லையென்றால்
சேய் நீயில்லையல்லவா!
என்னாலே
பிறந்த நீ
எனக்குள்ளே இருந்து
எல்லாம் பெற்ற நீ
மகானாக மகாத்மாவாக
இந்த மண்ணில் நீ
வாழாவிட்டாலும்
மனிதனாக
வாழ மாட்டாயா?
மனிதத்துவதையும்
புனிதத்துவத்தையும்
உன்னில் நீ
வளர்க்க மாட்டாயா?
நாணயத்தையும்
நாணத்தையும்
வாழ்வில் நீ
பேணமாட்டாயா?
எனக்குள்ளிருந்து
வந்தவனே!
என் மகனே!
உனக்குள் உள்ள
உணர்வுகளை
ஊனமாக்கிக்
கொள்ளாதே!
அரக்கத்தனத்தை வளர்த்து
இரக்கத்தனத்தை
கொல்லாதே!
தீக்குணங்களை விதைத்து
தீவினைகள் செய்யாதே!
மனிதத்தை புதைத்து
மிருகமாய் வாழாதே!
அன்னை என்
அறிவுரைகளை
ஏற்றுக் கொள்!
உன்னை நீ
மாற்றிக்கொள்!
ஓர் அன்னையின் அறிவுரை!
221
previous post