குருதி வழிந்து
குற்றுயிராய்க் கிடந்தாலும்
கொண்ட கொள்கை
விடமாட்டோம்
அடக்குமுறை கண்டு
அஞ்சவில்லை நாமும்
அல்லாஹ்வின் உதவி வரும்
அதுவரையும் காத்திருப்போம்——–!
ஆதரவற்ற அநாதைகளாய்
அலைந்து திரிந்த யூதர்களே
நாம் செய்த நன்றியை
மறந்து விட்டீர்
கண நேரத்தில்
சிறுவர் பெரியோரெல்லாம்
சிந்தும் கண்ணீர்
ஆறாய் ஓடுவதை
நீ பார்க்கவில்லையா—–!
பலஸ்தீனம் தாய்ச்சொத்து
என்றொருநாள்
அதை மீட்போம்
யூத வெறித்தனம்
செய்த பாவத்தை
மன்னிக்கவும் மாட்டோம்—–!
குர்ஆனைச் சுமந்த
ஹாபிழ்கள் நாம்
இறந்தாலும் மடிந்தாலும்
சுவர்க்கம் தான் எமக்கு——!
வெற்றி பெறுவோம்
வீரக் கொடியேந்துவோம்
இறையுதவி வேண்டிநிதம்
பிரார்த்தனை புரியுங்கள்——-!
மன்னிக்க மாட்டோம்
486
previous post