Home » உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் இலங்கை வருகிறது

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் இலங்கை வருகிறது

இன்றும் நாளையும் கொழும்பு துறைமுகத்தில்

by Damith Pushpika
November 19, 2023 6:20 am 0 comment

உலகின் மிகப்பெரிய சுற்றுலாக் கப்பல் இன்று (19) இலங்கையை வந்தடைவதுடன், இந்தக் கப்பல் இரு தினங்கள் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருக்குமெனவும், கொழும்புத் துறைமுகத் தகவல்கள் தெரிவித்தன.

இன்று மற்றும் நாளை (20) வரை இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.

நாட்டில் சுற்றுலாப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்தக் கப்பல் இலங்கைக்கு வருகை தருவதுடன், சுற்றுலாப் பயணத்துறையில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமான YARA GLOBAL (Pvt Ltd) நிறுவனத் தலைவர் எச்.எம்.ரியால்டீன் இந்தக் கப்பல் நங்கூரமிட்டிருக்கும் இடத்துக்கு விஜயம் செய்து, கப்பலை பார்வையிடவுள்ளதாகவும், கொழும்புத் துறைமுக தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன், இந்தக் கப்பலில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் சுற்றுலாத் தளங்களை பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கொழும்புத் துறைமுக தகவல்கள் தெரிவித்தன.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division