அஜித் தற்போது லைக்கா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் அடுத்ததாக விஜய்யின் லியோ படமும் வெளியாகிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.
இந்த சூழலில் அஜித்தின் விடாமுயற்சி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை இனியும் காலதாமதம் செய்து வருத்தத்தில் தள்ளி விடக்கூடாது என்பதற்காக அஜித் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதாவது இந்தப் படத்தில் சஞ்சய் தத், அருண் விஜய் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த சூழலில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை அஜர்பைஜானில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. அதாவது முழு வீச்சாக 50 நாட்களிலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்து விடலாம் என்று யோசித்த நிலையில் நடுவில் தீபாவளி பண்டிகையால் பிரேக் எடுக்க நினைத்திருந்தனர். ஆனால் இப்போது அஜித் ஒரே கட்டமாக படத்தை எடுக்க சொல்லிவிட்டாராம். இதனால் விடாமுயற்சி படக்குழு தீபாவளியை படப்பிடிப்பில் தான் கொண்டாட இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அங்கு சண்டைக் காட்சிகள் மற்றும் சேச்சிங் சீன்கள் படமாக்கப்பட இருக்கிறதாம். விடாமுயற்சி படத்தில் இந்த காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. அஜித்தின் வலிமை படத்திற்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருந்தது. அதாவது வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பும் தீபாவளி சமயத்தில் நடந்தது. அப்போது ஹைதராபாத்தில் தான் வலிமை படக்குழு தீபாவளியை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் சீக்கிரம் வெளியானால் போதும் என்பதுதான் இப்போது அஜித் ரசிகர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.வலிமை போல் விடாமுயற்சிக்கும் ஏற்பட்ட நிலைமை.