362
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு கட்சித் தலைமையகம் தயாராகியுள்ளது. இதில் கட்சி அமைச்சர்கள், தலைவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சகோதர கட்சிகள் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுடனும் இணைந்து இந்த பொது மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.