நடுநிசியில் ஏனோ
சட்டென்று முழிப்பு வர
சடுதியாய் வந்து சென்றது
சலனமில்லா சில நினைவுகள்
ஒரு காலத்தில்
மனிதர்களின் தொடர்பும்
மகத்துவமான உறவுகளும்
துண்டிக்கப்படா நேசமும்
துரத்தியும் விட்டகலாத பாசமும்
துளித் துளியாய் சேர்ந்து
பெருவெள்ளமாகிப் போனது
ஆனால் இப்போது
எங்கே அவர்களெல்லாம் என
உற்று நோக்கிப் பார்த்தும்
உயிர் ஆழம் வரை சிந்தித்தும்
பதில் மட்டும் கிட்டவே இல்லை
கிட்டினாலும் அதை ஏற்றிட
மனதும் தயாரில்லை
ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி
மனிதர்களும் மாறியாயிற்று
மனங்களும் மாறியாயிற்று
நானும் மாறி விட்டேன்
நீயும் மாறி விட்டாய்
மொத்தத்தில் இந்த
உறவுப் பாலங்களும்
சுக்கு நூறாய் உடைக்கப்பட்டாயிற்று
இருந்தும்
என்னைப் போல் யாருக்கேனும்
நடுநிசியில் முழிப்பு வரா விட்டாலும்
பரவாயில்லை
என்னைக் கடந்து போகையிலேனும்
என்னை நினைவிருக்கும்
அந்த ஒற்றை நன்றி
போதும் எனக்கு!
ஒற்றை நன்றி
307
previous post