287
எங்கள் மணித்திரு
நாடு — உலகில்
எங்கும் உயர்ந்திடப் பாடு !
பொங்கும் கவிமலர் கோடி — ஈழப்
பெண்ணாள் கழுத்திலே சூடு !
இந்து சமுத்திர முத்து — எங்கள்
ஈடிணை இல்லாச் சொத்து !
வந்து இரசித்தவர் பித்தாய் — மீண்டும்
வாஞ்சை கொள்வரே நித்தம் !
இயற்கை வளங்கள் கொஞ்சும் — அதில்
இனிமை சேர்ந்தெழில் விஞ்சும் !
பயக்கும் நன்மைகள் நெஞ்சில் — நிதம்
பசுமை நினைவதாய் எஞ்சும் !
உலக அரங்கினில் ஒருநாள் — இலங்கை
உயர்வு கண்டிடும் திருநாள் ;
எழுந்து விரைந்துமே வருநாள் — எங்கள்
இதயம் குளிர்ந்திடும்
பெருநாள் !