314
நீங்கள் தூங்கும் நேரத்தில்
நான் பயணம் செய்பவள்
உங்கள் தூக்கம் தானெனக்கு
ஊக்கம் தந்துகொண்டிருக்கின்றது
நான் தூங்கிக்கொண்டிருந்த
அந்த பொழுதுகளை நினைத்து
வெட்கித்து கொள்கிறேன்
விழித்துக்கொண்டே இனி கனவு
காணப்போகிறேன்
கனவு காணச் செய்ய விடாத அந்த
தூக்கத்தின் மீதெனக்கு கோபம்
இனி நான் தூங்கப்போவதுமில்லை
ஓய்வெடுத்து சோம்பேரியாகப்
போவதுமில்லை
உங்கள் தூக்கத்தில் வரும் கனவுகள்
மறைந்து விடக்கூடும்
ஆனால்
நானோ விழித்துக்கொண்டு கனவு
காண்கிறேன்