நாள் போக போக
உனக்கு பித்து பிடித்த
மாதிரி தோன்றும்..
ஆனால்
அந்த நேரம் உனக்கு
பைத்தியமே பிடித்திருக்கும்..
காலையில்
எழும்பவே வெறுப்பாய்
சூரியனை திட்டித் தீர்ப்பாய்..
ஆபிஸை நினைத்து
நினைத்து அலுப்பாய்
உன் ஆபிஸ் ஆடையை
ஆசையோடு தடவுவாய்
எட்டிப் பார்த்து..
றோட்டில் வெட்டியாய்
போகின்றவன் எல்லாம்
வேலைக்கே போவது
போல் உணர்வாய்..
உன் உலகம் சுருங்கி
உன் அறை உலகாகும்
அறையை விட்டு
வெளியேற மறுப்பாய்..
இரவெல்லாம்
கண் விழித்திருப்பாய்..
தனியே விட்டத்தை
பார்த்து பேசிக்கொண்டிருப்பாய்
டொய்லட்டில் இருந்தே
கனவு காண்பாய்
கடைசியாய் செய்த
வேலையில் தொடர்ந்து
பிழை காண்பாய்
மனதுக்குள் ஐடியா
மழை பொழியும்..
ஆபிஸில் மற்றவரெல்லாம்
தகுதியில்லாமல் தோன்றும்
மற்றவரிடம்,
நீயே அதற்கு
தகுதியென்பாய்..
உன் பைழய கொம்பனியை
நினைக்கும் போதெல்லாம்
அதை வைவாய்
பசியில்லாமல் சாப்பிட்டுக்
கொண்டே இருப்பாய்
தண்ணீர்
குடிக்க மறப்பாய்
டீ குடிக்க ஒரு
பார்ட்னர் தேடுவாய்
ஆளில்லாமல்
முணுமுணுப்பாய்
உனக்கு நீயே
திட்டித் தீர்ப்பாய்..
யாரும் உற்றுப்பார்த்தால்
இவனுக்கு எப்படித் தெரியும்
என்று ஏங்குவாய்
எதேச்சயாகக் கூட பிறரிடம்
பேச தயங்குவாய்
ஈமெயில் பார்க்க
scroll பண்ணி பண்ணி
Mouse தேய்ந்திரிக்கும்..
Junk email எல்லாம்
தேடி தேடிப் படிப்பாய்
பழைய contact எல்லாம்
தேடித் தேடி எடுப்பாய்
பழைய பகைமையெல்லாம்
உடனே மறப்பாய்..
அவனுக்கு
ஈமெயில் டராப்ட் செய்வாய்
அனுப்பவா இல்லாயா என்று
நாட்கணக்கில் ஏங்குவாய்
அனுப்ப ஒரு
சில்லி ரீசன் தேடுவாய்
அனுப்பிய பின் ஏங்குவாய்..
வருகின்ற
அட்வடைஸ்மெண்ட் sms கூட
முழுமையாக படிப்பாய்..
வரும் phone call எல்லாம்
Interview call போல்
கனவு காண்பாய்.
போனை விட்டு
நகர மறுப்பாய்..
கொம்பியூட்டர் ஆப்
பண்ணாமலே வைப்பாய்..
எந்த வேலைக்கும்
றெடியென்பாய்..
எந்த இடத்திற்கும்
ஒகே என்பாய்
எல்லா அப்ளிகேசனும்
சக்ஸஸ் என்று எண்ணுவாய்
ஆனால் எதிலுமே
ரிப்ளை வராது
படைத்தவன் விடுவானா
நீ நினையா புறத்திலிருந்து
உனக்கு உனக்கான
வேலை வரும்
மறவாதே..
வேலையின்றி இருந்துபார்
266
previous post