335
நாளும் பிறந்தது: தீப
நாளும் வந்தது:
நாட்டிலும் வீட்டிலும்
ஒளி பிறந்தது
காலம் மலர்ந்தது
கவலைகள் தீர்ந்தது
காருண்யம் பிறந்ததென
தீபத்தை ஏற்றுவோம்
இருள் மறைந்தது
இனிமை தந்தது
இல்வாழ்வு இன்புற
இன்பநாளும் மலர்ந்தது
அருள் பரவி அவனியில்
தவழ்ந்தது
அணையா தீபத்தை இன்றே
ஏற்றுவோம்
எல்லோரும் வாழ்வில்
ஏற்றம் கண்டது
ஏழ்மையை ஒழிக்க வந்தது
தீபாவளியது
நல்லோரும் போற்றினர்
நலம்பெற வந்தது
நாடு சிறக்க நலம்பெற
தீபத்தை ஏற்றிடுவோம்
அதர்மத்தை அழித்தது:
ஆணவத்தை கெடுத்தது
அட்டூழியம் புரிந்த
ஹம்சனை வதைத்தது
தர்மத்தை காத்தது
தயவுள்ளம் பெற்றது
வந்தது தீபாவளியை
மகிழ்வோடு ஏற்றிடுவோம்.