318
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19ஆம் திகதி வெளியானது. Seven Screen Studio தயாரிக்க அனிருத் இசையமைப்பில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். ஆனால் விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது. விஜய் என்ற பெயருக்காகவே படம் 15 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் முதலாம் திகதி படத்தின் வெற்றிவிழா படுகோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் படம் இதுவரை ரூ. 575 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரியவருகின்றது.