பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் கடந்த வாரம் ரெட்கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பிரதீப்புக்கு அநியாயம் இழைக்கப்பட்டது என கிட்டத்தட்ட அனைத்து பார்வையாளர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவருடைய குடும்ப பெண்கள் அனைவரும் ரெட்கார்டை காண்பித்தபடி பிரதீப் உடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சியும் உள்ளது.இதனையடுத்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப், அதே ரெட் கார்டை வைத்து குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்து தன்னை வெளியேற்றியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் என கமெண்ட் பதிவாகி வருகின்றன.
ரெட் கார்டையே கொண்டாட்டமாக மாற்றிய பிரதீப்..
267