William Angliss Institute @ SLIIT நிறுவனமானது, இலங்கையில் சமையல்கலை, விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் துறையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் அதேவேளை, தமது நிறுவனம் வழங்கும் பாடநெறிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடத்தியது.
மாலபேயில் உள்ள SLIIT நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள William Angliss Institute @ SLIIT இல் இந்நிகழ்வு இடம்பெற்றது. William Angliss Institute @ SLIIT நிறுவனமானது, இலங்கையின் மிகப்பெரிய ஹோட்டல் துறைசார் கல்லூரி என்பதோடு, அவுஸ்திரேலியாவின் William Angliss Institute (WAI) நிறுவனத்துடனான கூட்டு முயற்சியாகும்.
“The Resplendent Academy by William Angliss Institute @ SLIIT” இனை ஆரம்பிப்பதற்காக, இலங்கையின் சொகுசு ஹோட்டல்களை நடத்திச் செல்லும் Resplendent Ceylon உடன் William Angliss @ SLIIT நிறுவனம் பங்காளித்துவத்தை கொண்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதிமுதல் செயற்படவுள்ள இந்தக் கல்லூரியானது, Cape Weligama – Relais & Chateaux resortஇல் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு இந்தத் துறையில் முதற்தரமான அனுபவத்தை வழங்குகின்றது. இது, சவாலான மற்றும் உற்சாகமான பணிச்சூழலில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகின்றது.