புன்னகையே புதுநகை
பூண்டிடலாம் பேருவகை
பீறிடுமே புத்துணர்ச்சி
பூத்திடுமே கண்குளிர்ச்சி
சிரித்தால் போதும்
சிறகுகள் விரியும்
பறவைகள் போலே
பண்ணிசை மேவும்
மனதின் சிறைக்குள்
மகிழ்ச்சி பரவும்
சினமும் குறைந்து
சிந்தையும் சீர்பெறும்
புன்னகையில் முகமும்
பூவாய் மலரும்
புதியதோர் அழகைப்
பதியமிட்டுச் செல்லும்
நம்பிக்கை அளிக்கும்
நலவில் முடியும்
மனநிலை மேம்படுத்தி
நிம்மதியைக் கொடுக்கும்
அழுத்தம் குறைக்கும்
அமைதியைத் தரும்
எதிர்ப்புசக்தி கூட்டி
இன்பம் பெருக்கும்
வலி நிவாரணி
வாழ்வின் பூரணி
வளமான சிகிச்சை
வழிந்திடும் புன்னகை
இதழ்கள் அணிந்திடும்
இனிய ஆபரணம்
இறவாத நேர்மறை
எண்ணங்கள் வளர்த்திடும்
தசைகளைத் தளர்த்தும்
தணிவான நிலைவரும்
தெம்பை வளர்த்து
துன்பம் துடைக்கும்
மிருகங்களுக்கும் நமக்கும்
மிகப்பெரும் வித்தியாசம்
மின்னிடும் புன்னகையில்
மிருதுவாகும் உலகம்
புன்னகை என்ன விலை?
463
previous post