459
பூக்களின் தேசம்
புன்னகை வாசம்
மலருமே நேசம்
மறக்குமே சோகம்…
உயிர்வரை பாசம்
தொடருமே பந்தம்
இனிக்குமே சொந்தம்
குளிருமே சித்தம்…
வீணையின் சந்தம்
மனமதின் சாந்தம்
ரசனைகள் மாறும்
காவியம் பாடும்…
சுற்றமும் தெளியும்
சிந்தனை கிளரும்
கற்பனை துளிரும்
கவிகளும் பிறக்கும்…
வாழ்வினில் சோகம்
துடைபடும் பாவம்
பொறுமையில் தேற்றம்
ஒழியுமே வாட்டம்…
காலங்கள் மாறும்
காயங்கள் ஆறும்
அனுபவம் கூடும்
படிப்பினை கூறும்
பற்பல
சங்கதிகளும் கூறும்!!!