கொமர்ஷல் வங்கியின் omni-channel டிஜிட்டல் வங்கி மேடையான ‘கொம்பேங்க் டிஜிட்டல்’ இலங்கையின் ‘மிகச் சிறந்த நடமாடும் வங்கி’ செயலியாக குளோபல் பினான்ஸ் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சஞ்சிகையின் 2023ம் ஆண்டுக்கான லண்டனில் இடம்பெற்ற உலகின் மிகச் சிறந்த டிஜிட்டல் வங்கிச் சேவைகளுக்கான விருது வழங்கும் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலிடத்தில் உள்ள டிஜிட்டல் வங்கி சேவை அதிக பாவனை மற்றும் வாடிக்கையாளர் ஊடுருவல் என்பனவற்றை உள்ளடக்கியதாகும். கொம்பேங்க் டிஜிட்டல் என்பது கொமர்ஷல் வங்கியின் இணையவழி வங்கி அலைவரிசைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். எல்லா இணையவழி செயற்பாடுகள் மூலமாகவும், தனியார் கணனிகள், மடிக் கணனிகள், டெப்லட்கள், ஸ்மார்ட் தொலைபேசிகள் என எல்லா கருவிகள் மூலமாகவும் இந்தச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கிப்பிரிவு உதவி பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ஸ வங்கியின் சார்பாக இந்த விருதை ஏற்றுக் கொண்டு பேசும் போது “இந்த விருது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். காரணம் இலகுவான அணுகும் வசதி, பண்புகள் மற்றும் செயற்பாடுகள், இலகுவான பாவனை, வித்தியாசமான தளங்கள் மற்றும் செயற்பாட்டு முறைகள் ஊடான பாவனை, வெளிப் பங்காளிகளுடனான ஒருங்கிணைப்பு, உள்ளடக்கம், பொறுப்பான வடிவமைப்பு மற்றும் இதர பண்புகள் என எல்லா அம்சங்களையும் பரிசோதித்த பின் கிடைப்பதாகும்.” என்றார்.