651
நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்க அதிகாரிகளுடன் நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் அவர்களது நியமனம் தொடர்பாக குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்படுமெனவும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.