சியட் களனி நிறுவனம் அண்மையில் அதன் ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தையும் மர நடுகைத் திட்டத்தில் ஈடுபட வைத்தது.
ஒரு தொழில்துறையில் சூழல் நிலைபேற்றை ஒரு சிலர் மட்டும் உச்சரிக்கும் மந்திரமாக அன்றி, அதற்கான அர்ப்பணிப்பில் ஒவ்வொருவரையும் ஈடுபட வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சியெட் டயர் உற்பத்தியாளர்களின் சமகால மரநடுகைத் திட்டம் அதன் களனி மற்றும் களுத்துறை வளாகங்களில் ஏக காலத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஊழியர்களுக்கு ஆயிரம் மரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. அந்த மரக்கன்றுகளை அவர்கள் தமது வீட்டுத் தோட்டங்களில் நட்டு பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இவை வழங்கப்பட்டுள்ளன.சியெட் களனி முகாமைத்துவப் பணிப்பாளர் ரவி தத்லானி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிறுவனத்தின் அலுவலக மற்றும் தொழில்சாலை ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஏற்கனவே மேற்கொண்டு வரும் நிலைபேற்று முயற்சிகளில் முக்கிய ஒன்றாக விரைவில் அமுல் செய்யப்படவுள்ள மிகப் பெரிய சூரிய சக்தி திட்டம் அமையவுள்ளது.
நிர்வாக மற்றும் விற்பனை செயற்பாட்டில் கடதாசி நுகர்வை குறைத்து கடதாசி பாவனையற்ற ஒரு அலுவலகத்தை ஸ்தாபித்தல் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல், வர்த்தக முடிவு செயற்பாட்டில் பல்வகையான 3R செயற்பாடுகள் என்பனவும் இதில் அடங்கும்.