புதுக்குடியிருப்பு
வலிகளை கடந்து
மகிழ்ந்திடப் பழகிவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
துரோகத்தை கண்டும்
பழகியே விட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
அன்பை கொடுத்தும்
நடுத்தெருவில் நின்றுவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
உதவி செய்தும்
வசைகள் கேட்டுவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
சாதிக்க எண்ணியே
தடைகளையும் கண்டுவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
பாசம் என்றே
பிரிவையும் உணர்ந்துவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
நம்பிக்கை வைத்தே
அவமானத்தை அடைத்துவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
கனவுகள் கண்டே
பலதையும் இழந்துவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
வேலையின்றி வாழ்வில்
துன்பத்தையும் கண்டுவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
அன்பைக் கொடுத்தே
அடியையும் வாங்கிவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
தவறுகள் செய்தே
மனதால் வாடிவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
உறவை மதித்தேன்
உதறியே தள்ளிவிட்டது
மறுஜென்மம் வேண்டாம்
வறுமையில் வாடி
வாழ்க்கையை உணர்ந்துவிட்டேன்
மறுஜென்மம் வேண்டாம்
ஒரு ஜென்மம்
எனக்குப் போதும்
மறுஜென்மம் வேண்டாம்
மறுஜென்மம் வேண்டாம்
767
previous post