தோப்பூ ஊரான்
பிறவியில் ஊனமில்லை
வளர்கையில் பழுதில்லை
வலுவாய் பேணி
வந்த உறுப்பை
பல தசாப்தம்
கழித்து பறிகொடுத்து
ஊனமாய் வீட்டில்
அடைக்கலமானாயே
சீனி என்றும் சக்கரை என்றும்
நீரிழிவு என்றும் அழைக்க
பொருத்தமில்லா நாமம் சூடி
வாழ்வில் இன்பம் என்னும்
இனிப்பே இல்லாமல் செய்த
வியாதி – நீ
எல்லோர் உதிரத்திலும்
நீ தேவை
இல்லாவிடில்
பாரிசவாதமாக்குவாய்
என்று விரட்டுவதனாலேயே
இனிப்பு என்னும் உன்னை
உணவில் சேர்த்தோம்
எங்களை அறியாமலே
உதிரத்தில் -நீ – கூடியது
கவலையும்
ஆழ்ந்த சிந்தையும்
பரம்பரை என்றும்
முறையில்லா உணவு என்றும்
வந்த சிறு காயம்
ஆறவிடாமல்
உன் வித்தை பல செய்து
வலிதாங்க முடியாமல்
காலை எடுக்க மன்றாட
வைத்த அரக்கனாய் மாறினாயே
நீரிழிவு – நீ -நோயல்ல
நோய்த்தொகுதி
மக்கள் இன்னும்
விழிப்படையாமல்
கோதுமை மா என்னும்
ஊட்டச்சத்தில்லா
உணவால் உன்னை
கூவி அழைக்கிறார்களே!
எப்போது திருந்தும்
எம் உறவுகள்
மனித பிறவிக்கும்
நான்கு கால்கள் தேவைப்படும்..
இனிப்பாக வந்து இன்னல் தாராய்….
757
previous post