இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன போதி வளாகத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 9.30 மணிக்கு கதிர்காமக்கந்தனின் திருவுருவச்சிலை வள்ளி, தெய்வானை சமேதராய் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
நூற்றாண்டை நெருங்கும் வேளையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்நிகழ்வு அமையவுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் வழிகாட்டலின் கீழ்
பொறியியலாளர் சண். குகவரதன், எம்.டி.எல்.குணரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வானொலி நேயர்களையும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை பணிப்பாளர் இரட்ணசிங்கம் கணபதிப்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.