இலங்கையின் அனைத்துத் துறையினரின் பங்களிப்புடன் மின்சாரம் மற்றும் இலத்திரனியல் போக்குவரத்து தொடர்பான முதலாவது தேசிய கண்காட்சி மற்றும் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் 11ஆம் 12ஆம் திகதிகளில் ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
இந்த தேசிய கண்காட்சி 2024ஆம் ஆண்டின் மின் நடப்பு ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி உலக மின்சார தினத்தை முன்னிட்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், நிதி, சுற்றாடல், சுகாதாரம் மற்றும் பல அமைச்சுகள் மற்றும் பல தனியார் நிறுவனங்களிடமிருந்து இதற்காக பங்களிப்புகளை பெற்றுள்ளது.