நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே சினிமாத்துறையில் இருப்பவர்கள்தான். 2000ங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சில படங்களில் நடித்து விட்டு படிப்பதற்காக சென்றுவிட்டார். அதன் பிறகு, மலையாளத்தில் கீதாஞ்சலி என்னும் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில், இது என்ன மாயம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார். தொடக்கத்தில் கீர்த்தி சுரேஷ் அதிகமான விமர்சனங்களை எதிர்நோக்கினார். நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு இவருக்கு இருந்த விமர்சனங்களும் விருப்பமாக மாறியது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இவருக்கு 16.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.
முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் தற்போதைய மதிப்பு 41 கோடி ரூபாய். அந்த வகையில் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார். ஒரு வருடத்திற்கு 4 கோடி ருபாய் வருமானம் வருகிறதாம். இவரின் வருமானம் பிரதானமாக சினிமா மற்றும் தொலைக்காட்சியின் மூலம் வருகிறது. ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம் கீர்த்தி சுரேஷ்.
சினிமாவில் நடிப்பதுமட்டுமில்லாமல், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், விளம்பர படங்களின் ஒரு ஒப்பந்தத்திற்கு கிட்டத்தட்ட 31 லட்சம் சம்பளம் வாங்குகிறார் கீர்த்தி சுரேஷ். முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ப்ராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். அவரது சமூக வலைதள பக்கத்தில் விளம்பரப்படுத்த 25 லட்சம் கேட்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கார்கள் என்றால் அவ்வளவு பிரியமாம். அந்த வகையில், பல கார்களை ட்ரை செய்து பார்த்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் சில பல கார்களை வைத்திருக்கிறார். 60 லட்ச ரூபாய் மதிப்பிலான வோல்வா 690, 1.38 கோடி ரூபாய் மதிப்பிலான BMW 7 சீரிஸ் 730 ld, 81 லட்ச ரூபாய் மதிப்பிலான மெர்சிடீஸ் பென்ஸ், 25 லட்ச ரூபாய் மதிப்பிலான டொயட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற பல கார்களை வைத்திருக்கிறாராம் கீர்த்தி. அடுத்தடுத்த லைன் அப்பில் படங்கள் வரவிருக்கின்றன. தமிழில் 4 படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சிரேன், ரகுத்தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி போன்ற படங்கள் படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.