4ஆவது புதிய தலைமுறை விருதுகள் 2023 நிகழ்வின் அனுசரணையாளராக சன்மட்ச் கம்பனியின் முன்னணி உற்பத்தியான சூரியா இணைந்துள்ளது.
இளம் நபர்களின் சிறந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் புத்தாக்கம், சிறப்பு மற்றும் திறமைகள் போன்றன கௌரவிக்கப்பட்டிருந்தன.
2020ஆம் ஆண்டில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது முதல், இலங்கையின் புதிய தலைமுறைக்கான தமது அர்ப்பணிப்பின் அங்கமாக, சூரியா அனுசரணை வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு, நிகழ்வின் பிளாட்டினம் அனுசரணையாளராகவும், பிரதான பங்காளராகவும் சூரியா இணைந்திருந்தது. அடுத்த தலைமுறை வியாபார தலைவர்களின் ஆக்கத்திறனை ஊக்குவித்து அவர்களுக்கு வலுவூட்டுவதற்கான சூரியாவின் உறுதிமொழியை இந்த பங்காண்மை மேலும் உறுதி செய்திருந்தது.
புதிய தலைமுறை விருதுகள் 2023ஐ, WIM புதிய தலைமுறை பிரிவு, தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்துடன் (NYSC) இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வு 2023 ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த ஆண்டின் விருதுகளின் தொனிப்பொருளாக ‘Daring to be Different’ என்பது அமைந்திருந்ததுடன், இளைஞர்களை பிரத்தியேகத்தன்மையை பின்பற்றுவதற்கு சவாலுக்குட்படுத்தும் வகையில் அமைந்திருப்பது மாத்திரமன்றி, சூரியாவின் பயணமான – வழமையை மாற்றியமைப்பதில் தைரியமாக முன்வந்திருந்த நிறுவனம் என்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இலங்கை சந்தையில் மரத்தினாலான தீக் குச்சிகள் பயன்பாடு ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில், சூரியாவின் ஸ்தாபகர் முதன் முறையாக மெழுகினால் பூசப்பட்ட தீக் குச்சிகளை அறிமுகம் செய்திருந்தார்.