தமிழ் சினிமாவில் அவருக்கென தனி ஸ்டைலோடு இசையமைப்பாளராக இருப்பவர்தான் விஜய் ஆண்டனி. இவர் படங்களிலும் நடிக்கிறார். இவரது பட தேர்வே வித்தியாசமாக இருக்கும். இவரை நடிகராகவும் மக்கள் ரசித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக இவரது பிச்சைக்காரன் படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ரத்தம் படமும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என இரு மகள்கள் இருந்தார்கள். ஆனால், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது விஜய் ஆண்டனியின் மூத்த மகளான லாரா ஆண்டனி அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை திரை வட்டாரங்களில் மட்டுமல்லாது தமிழ் நாட்டையே பெரும் அளவில் உலுக்கியது. விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்துதான் இறந்தார். அதேபோல, அவரது மகளும் தற்கொலை செய்து இறந்தது அவரது குடும்பத்திற்கு தாங்க முடியாத பாரத்தை கொடுத்திருக்கிறது. மீரா ஆண்டனி கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி உயிரிழந்தார். அவர் இறந்த பத்தாவது நாளில் ரத்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அவரது இளைய மகள் லாராவுடன் சென்றார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனியின் மனைவி X தளத்தில் ஒரு கண்கலங்கவைக்கும் பதிவை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், ” நீ பதினாறு வருஷம்தான் இருந்திருப்பாய் என தெரிந்திருந்தால் உன்னை என்னிடமே வைத்திருந்திருப்பேன். சூரியனுக்கும் நிலவிற்கும்கூட காட்டியிருக்கமாட்டேன்.. உன் நினைவுகளால் நான் சோகத்தில் மூழ்கியிருக்கிறேன்.. நீ இல்லாமல் எங்களால் இருக்க முடியவில்லை. சீக்கிரம் அப்பா மற்றும் அம்மாவிடம் திரும்பி வந்துவிடு, லாரா உனக்காக காத்துக்கொண்டே இருக்கிறாள்.. லவ் யூ தங்கம் ” என பதிவிட்டிருக்கிறார்.
பாத்திமா விஜய் ஆண்டனியின் இந்த பதிவு பார்ப்போரின் நெஞ்சை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது. தற்கொலை செய்துகொள்வது எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வாகாது என பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி, ஆனால் அவரது மகளே இறந்திருப்பது அவரின் குடும்பத்திற்கு எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும் என உணரமுடிகிறது. பாத்திமாவின் பதிவிற்கு எந்த ஆறுதலும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை..