Home » ஜக்சன் அந்தனி எனும் மகா கலைஞன்

ஜக்சன் அந்தனி எனும் மகா கலைஞன்

by Damith Pushpika
October 15, 2023 6:02 am 0 comment

என்றாவது ஒருநாள் ‘வெலிகத்தர’ திரைப்படத்தை மீண்டும் தயாரித்தால் அன்று நான் நடித்த கோரிங் முதலாளி கதாபாத்திரத்துக்கு தற்போது உள்ள திறமையான நடிகர் யார் என என்னிடம் கேட்டால் நான் உடனடியாக ஜக்சன் அந்தனி பெயரையே பரிந்துரைப்பேன். ஜக்சன் இன்றுள்ள சிறந்த நடிகர் அதைப்போன்று அனைவரையும் கவரக்கூடியவர் என பிரபல நடிகரான ஜோ அபேவிக்ரம அன்றொருநாள் கூறினார்.

ஜோ அபேவிக்ரமவின் பாராட்டைப் பெற்றவர் ஜோசப் மெல்சி ஜக்சன் அந்தனி எனப்படும் ஜக்சன் அந்தனி ஆவார். 1958 ஜூலை 18 ஆம் திகதி பண்டாரவளையில் பிறந்த அவர் வளர்ந்தது ராகம பொடி வீ கும்புற கிராமத்தில் ஆகும். தன்னுடைய மூத்த அண்ணனான சேனக டைட்டசுடன் நடிப்புத் துறைக்கு அடித்தளம் இட்டவர் ஜக்சனின் தந்தையாரான பெனடிக் அந்தனி. ராகமயில் பிரபலமான ‘வாசப்பு’ என்னும் நாட்டிய துறையை வளர்த்த கலைஞர் ஆவார், அவரும் ஒரு பாடகர்.

ஜக்சன் ஹபுகொட சாந்த மரியா கல்லூரியில் கல்வி கற்ற வேளையில் சித்திரம் வரைவதிலேயே பிரபலமாக திகழ்ந்தார். பாடசாலையின் சித்திர பாட ஆசிரியரான பிந்து அவரை சித்திரக் கலையில் ஈடுபடுத்தினார். சித்திரக் கதைகளுக்கு சித்திரம் வரையும் கலைஞராக அவர் முதலில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அது கனேமுல்ல கலஹிட்டியாவ மகாவித்தியாலத்தில் கற்கும் காலத்திலாகும். 1977-ல் நெவில் டயஸ் சுபசிங்க தயாரித்த ‘வாருவென் யன மினிஸ்ஸு’ நாடகத்தில் நடித்ததன் மூலம் ஆரம்பித்த அவரது நாடக வாழ்க்கை சரச்சந்திர தயானந்த குணவர்தன, சுகத்த பால த சில்வா, லூசன் புளத்சிங்கள, தர்மசிரி பண்டாரநாயக்க, ஜயந்த சந்திரசிறி ஆகிய கலைஞர்களின் படைப்புகளின் மூலம் மேலும் பரிமளித்தது.

ஜக்சனின் நெருங்கிய நண்பன் அதே ஊரைச் சேர்ந்த சிறியந்த மெண்டிஸ் என்னும் கலைஞன்.

இந்த நண்பனைப் பற்றி ஜக்சன் தனது கடந்த கால கதையான ‘பனா புத்திரகே மத்தக வஸ்துவ’ நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ஜக்சன் மற்றும் சிறியந்த ஒரே ஊரில் வசித்தாலும் அவர்கள் இருவரும் சிறு பிள்ளைப் பிராயத்தில் ஒருவருக்கொருவர் எதிரிகள் போன்று நடந்து கொண்டுள்ளார்கள்.

1980ல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடகப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜக்சன் குழுவினர் ‘லோதிய’ நாடகத்தையும் சிறியந்த குழுவினர் ‘தேச சீமா’ நாடகத்தையும் தயாரித்திருந்தார்கள். எவ்வாறாவது ராகமைக்கு வெற்றியை கொண்டு வர வேண்டும் என இரு தரப்பாரும் எண்ணினார்கள். இருகுழுவினரின் கோபத்தாபங்களும் மறைந்து போயின ஜக்சனின் நாடகத்துக்கு இசை வழங்கும் பெர (தாள வாத்தியம்) வாத்தியக்காரர் வராதபோது. சிறியந்த பெர ஒன்றைகொண்டு வந்து கொடுத்தார். முதற்தடவையாக ஜக்சனும் சிறியந்தையும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். நாடகக் குழுவின் மேக்கப் கலைஞர் வராத போது ஜாக்சன் அவர்களுக்கு மேக்கப் போட்டார். போட்டியின் முடிவில் ஜக்சனின் நாடகம் முதலிடத்தை பெற்ற வேளையில் சிறியந்த துணை நடிகராக பணப் பரிசும் பெற்றார். அன்றைய தினம் கருணாதாச சூரியாரச்சி, ஜயந்த சந்திரசிறி ஆகியோரும் விருதுகள் பெற்றார்கள். ராகம வெற்றி பெற்றுவிட்டது என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பின்னர் மீண்டும் சிறியந்தையும் ஜக்சனும் சந்தித்தது ‘பளிங்கு மெனிக்கே’ என்னும் டெலி டிராமாவிலாகும். அதில் ‘விஜய்’யின் பாத்திரத்தை ஜக்சனும் ‘ சூரசேன’ பாத்திரத்தை சிறியந்தையும் நடித்தார்கள்.

கனேமுல்ல கலஹிட்டியாவ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்கள விசேட பட்டதாரியான ஜக்சன் மோட்டார் சைக்கிளில் நாடக அரங்குகள் தோறும் சென்றார். அவரால் ‘பனா புத்ர வஸ்துவ பனா புத்ர குஹும்பு பெனிய’ நூல் 2000 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

ஜக்சனுக்கு திறமையான நாட்டியக் கலைஞர்களுடன் சிறந்த நாடகங்களுக்கு பங்களிப்பு வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மதுரஜவனிகா, லோமஹன்ஸ, மராசாந், தாராவோ இகிலெத்தி, மோரா, தவளபிஷன, ஒத்துகாரியோ நாடகங்கள் அவற்றில் சிலவாகும். கலைமாணி பட்டம் பெற்ற ஜக்சன் பேராசிரியர் சரச்சந்திர தயாரித்த நாடகம் ஒன்றில் முதல் தடவையாக பயிற்சி பெற்ற வேளையில் ஜக்சன் பற்றி அவர் கூறியது,

“பாருங்கள் இந்த மாணவன் பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியையே கற்கிறான். இவனுக்கு புத்த மதத்தை பற்றிய பெரும் ஆர்வம் உள்ளது. இந்நாட்டின் தேசிய கலாசாரத்தை வளர்ப்பதற்கு இவன் ஆவலுடன் இருக்கின்றான்”அதனால் ஜக்சன் அந்தனி என்கிற ஆங்கில பெயர் பொருத்தமற்றது. அதனால் இந்த பெயரை மாற்றுவோம் என கூறினார். இதைக் கேட்ட ஜக்சன் அந்தனி கௌரவத்துடன் அதனை நிராகரித்தார். அவர் ‘சிறிமெவன் தர்மபிரிய’ என்னும் பெயரையே பரிந்துரைத்தார். இந்த விடயம் குறித்து ஜக்சன் கூறுகையில்,

எனது உலகத்தில் வீரன் எனது தந்தை. அவர் இலங்கை மின்சார சபையில் அத்தியட்சகராக இருந்தார். தந்தை கிராமத்தில் ஒரு கலைஞர். இளைஞனாக இருந்த பொழுது நத்தார் நாடகங்களில் நடித்துள்ளார். மிக நன்றாக மெண்டலினை இசைத்தபடி பாடக்கூடியவர். தந்தையின் குரல் நான் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் என் காதுகளில் ஒலிக்கும். தந்தை என்னை சைக்கிளில் அமர்த்தி பாடசாலைக்கு அழைத்துச் செல்வார். முன்னால் பாரில் உட்கார்ந்து செல்வதை விட நான் பின்புறமாக பயணிக்கத்தான் விரும்பினேன். ஜக்சன் மேடை நாடகங்களில் அரச விருதுகளை பெற்றுள்ளதோடு தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தும் விருதுகளை பெற்ற ஒருவராவார். கடுல்ல, பிடகம் காரயோ, எல்ல லங்க வளவ்வவ, அகால சந்தியா, வெத ஹாமினே, சுசீமா என்பன அவற்றுள் சிலவாகும். குருகெதர திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையிலும் இவர் நுழைந்தார். அயோமா, லொக்கு துவ, தரணைய, குசபபா, பவ துக்க, பவகர்ம, சூர்ய அரண, அக்னி தாகய, கரில்லா மாக்கட்டிங், மில்ல சொயா, வீசி தெல, குசபபா போன்ற திரைப்படங்கள் அவற்றில் முக்கியமானவை. ஜூலியட்கே பூமிகாவ அவரின் இயக்கத்தில் முதலாவதாக வெளிவந்த திரைப்படமாகும். திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர், பாடகர் போன்று இலத்திரனியல் ஊடக தொடர்பாளர், தொலைக்காட்சி நாடக இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா, சொற்பொழிவாளர் என பலதுறைகளையும் கையாண்டவர். நாவல் எழுத்தாளராகவும் அவர் பெயர் பெற்றிருந்தார். சிங்களே வங்ச கதாவ’, ‘சலங்கனே’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்தளித்தவர். சுமதி, OCIC, ரைகம் மற்றும் அரச விருதுகள் பலவற்றால் கௌரவிக்கப்பட்டவர். 13 சுமதி விருதுகள் பெற்று சாதனை புரிந்தவர்.

ஜக்சன் கலை உலகில் நுழையும் போது நான்கு நண்பர்களை கொண்ட குழுவை அறிமுகம் செய்து கொண்டார்.

அந் நால்வரும் ஜக்சன் சிறியந்த, கமல் அந்தரஆராச்சி மற்றும் ஜயந்த சந்திரசிறி. நத்தார் கொண்டாட்டங்களின் போது இவர்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். அனைவரையும் கவரக்கூடிய தோற்றம் கொண்ட ஜக்சனை கமல் ‘பதி’ என்றே அழைத்தார். ஜக்சன் எழுத்தாளராக பல நூல்களை எழுதியுள்ளார் பனாபுத்ர, எபெவின் பிஹிவிய, மனமே, மகாசிங்களே வங்ச கதாவ, அபா, கந்த உட கிந்தர அவற்றில் பிரதான இடம் வகிக்கின்றன. இவை எதையும் எழுதாமல் மகாசிங்களே வங்ச கதாவவை மாத்திரம் எழுதியிருந்தாலும் அவரது பெயர் பேசப்பட்டிருக்கும்.

ஒரு தடவை சுகத பால த சில்வா ஜக்சனைப் பற்றி குறிப்பிடும்போது ஜக்சனை. அழகானவர், அறிவுடையவர் அது மாத்திரமல்ல ஆக்கபூர்வமான நடிகராகவே அவரை நான் காண்கின்றேன் அதுக்காக நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

ஜக்சனின் மனைவி குமாரி முனசிங்கவும் சிறந்த நடிகை, பாடகி. அவரின் மகனான சஜித்த அனுத்தரவும் தொலைக்காட்சி நாடக மற்றும் சினிமா நடிகர். மற்றுமொரு புதல்வனான அமில தனுத்தரவும் நடிகர் பாடகர். தந்தையும் மகன்கள் இருவரும் மேடையில் பாடியது எவ்வளவு பெருமையான விடயம்? சஜித், அமில போன்று அவரது மூத்த சகோதரி மாதவி வத்ஸலாவும் நடிகையாவார். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

ஏ.டி.ரஞ்சித் குமார் தமிழில் வீ.ஆர்.வயலட்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division