இலங்கை மலேசியா வர்த்தக கவுன்சில் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட CEO BUSINESS FORUM ஷங்ரிலா ஹோட்டலில் கவுன்சிலின் தலைவர் எச்.எம்.கே.எம். ஹமீஸ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதி மலேசிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் Dato Seri (Dr.) Zambry Abdul Kadir மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் உரையாற்றினார்.
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் பரஸ்பர வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதற்கும் வளர்ப்பதற்கும் சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இரு நாட்டு அமைச்சர்களும் தமதுரையில் குறிப்பிட்டனர்.
நிகழ்வில் Dialog Axiata PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, எபிக் டெக்னாலஜி நிறைவேற்றுத் தலைவர் கலாநிதி நயநா தெஹிகம மற்றும் HYRAX Oil நிறுவனத்தின் நிர்வாக பணிப்பளார் Dato Hazimah Zainuddin ஆகியோர் இலங்கை மற்றும் மலேசிய வர்த்தக நடவடிக்கைகள் பற்றிக் கலந்துரையாடினர்.
ருஸைக் பாரூக்