Home » சுமார் 700 பெண்கள் மார்பக புற்றுநோயால் இறப்பு
இலங்கையில் தொடர்ச்சியாக வருடாந்தம்

சுமார் 700 பெண்கள் மார்பக புற்றுநோயால் இறப்பு

by Damith Pushpika
October 8, 2023 7:52 am 0 comment

இலங்கையில் மார்பக புற்றுநோயினால் வருடாந்தம் 700 தொடக்கம் 800 பேர்வரை மரணிப்பதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகரும் சமூக மருத்துவருமான சுராஜ் பெரேரா தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், நாளாந்தம் 14 நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தெரிவித்தார்.

ஆரம்பகாலத்தில் இந்த நோயைக் கண்டறியும் பட்சத்தில் நோயைக் குணப்படுத்த வழிவகுக்க முடியுமென்பதுடன், நோய் வாய்ப்பட்ட சுமார் 10,000 பெண்களுக்கு முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார். 20 வயதுக்கும் மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்தம் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியமெனவும், மருத்துவர் சுராஜ் பெரேரா சுட்டிக்காட்டினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division