Home » புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டுக்கு நல்லதல்ல

புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டுக்கு நல்லதல்ல

எதிர்கால சந்ததியினரை பாதிக்கும்

by Damith Pushpika
October 8, 2023 7:19 am 0 comment

புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துமென்பதுடன், நாம் இந்த விடயத்தை உடனடியாகவும் பொறுப்புடனும் கையாளத் தவறினால், அது எமது நாட்டினுடைய எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை இருளடிக்கும் அபாயம் இருப்பதாக, எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (06) எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்த போது,

“இன்று நம் நாடு எதிர்கொள்ளும் புத்திஜீவிகள் வெளியேறும் சவாலின் தீவிரத்தன்மையை இதற்கு பொறுப்பான அனைவரும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தின் அபாயம் மேலோட்டமாகத் தெரியவில்லையென்றாலும், ஒரு நாடாக நாம் இவ்விடயத்தை உடனடியாகவும் பொறுப்புடனும் கையாளத் தவறினால், அது எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை இருளடிக்கும் பெரும் சோகமாக மாறக்கூடும்.

எமது நாட்டின் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு துறைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளதையும் இலவச சுகாதாரம், எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் தொடர்பான கல்வித்துறைகள் போன்ற மனித வாழ்வுடன் தொடர்புடைய அத்தியாவசியத் துறைகள் நாங்கள் கற்பனை செய்ய முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைக்கு வந்திருப்பது ஆபத்தின் விளிம்பில் இருக்கிறோமென்பதை புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் நாடு பூராகவும் மக்கள் வாழ்வதற்காக முன்னெடுக்கும் போராட்டங்களை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எமது நாட்டிலுள்ள திறமையான புத்திசாலிகள், திறமையான இளைஞர்கள் பாரியளவில் நாட்டை விட்டு வெளியேறி வருவதை நாம் அனைவரும் அறிவோம். இது தொடர்பாக 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division