நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் படம்தான் சித்தா. இந்த படத்தில் மலையாள நடிகையான நிமிஷா நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ்நாட்டில் பயங்கரமான வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும், கர்நாடகாவில் காவிரி பிரச்சனை இருந்தபோதும், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனால், தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் சித்தார்த்தை ஏமாற்றிவிட்டார்களாம்.
சித்தா திரைப்படம் வெளியானதும், கர்நாடகாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் சித்திதார்த். அனால், காவிரி பிரச்சினையால் அவர் அந்தக் நிகழ்ச்சியில் பேசமுடியாமல் வெளியேறினார். இந்த சம்பவத்திற்காக கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ் ராஜ், சிவராஜ்குமார் போன்றோர் மன்னிப்பு கேட்டனர்.அந்த வகையில், தெலுங்கு மக்களை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தார் நடிகர் சித்தார்த். அங்கு பேசிய அவர் அவரின் படங்களுக்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் கவனம் தருவதில்லை என பேசினார். மேலும், தமிழ் நாட்டில் உதயநிதி சித்த படத்தை பார்த்து அவர் படத்தை வாங்கியதாகவும், மலையாளத்தில் கோகுலம் கோபாலன் சித்தா படத்தை பார்த்து அவர் வாங்கியதாகவும் கூறினார். மேலும், கோகுலம் கோபாலன் கடந்த 55 வருடங்களில் இந்த மாதிரியான படத்தை பார்க்கவில்லை என கூறியதாகவும் சித்தார்த் கூறினார்.