வர்ணிக்க முடியாத வார்த்தைகளாய்
அழகிய நற்பண்புகள்
வரமாகக் கொண்டனர்
அண்ணலெம் நபிகள்
சிறந்த குணங்களோடு
சீலமாய் ஒழுகினார்
செவ்வனே வாழ்விலே
செங்கோல் ஓச்சினார்
நிலவுலகிற்கு ஏகிய
நிலவொளி அவர்கள்
நித்திய ஜீவிதமே
நானிலத்தில் நபிகள்
மக்கள் நலனில்
அக்கறைமிகு ஆகாயம்
திக்கெலாம் புகழுது
திருத்தூதரின் சகாயம்
வாழ்க்கையில் எப்போதும்
பேணினார் தூய்மை
இளமை முதற்கொண்டு
இயம்பினார் வாய்மை
இதயங்களின் ஆழத்தில்,
நபிகளாரின் கண்ணியம்
வேரூன்றித் தளைத்தது
நிலையான புண்ணியம்
நெஞ்சிலே நிறைந்தது
நிகரிலா நேர்மை
கண்களில் விரிந்தது
கருணையின் கூர்மை
நீதி வழுவா
ஆட்சித் தலைமை
நிரந்தர வேதம்தந்த
ஆன்மீக ஜோதி
ஏழைகளுடன் ஏழையாய்
சேர்ந்து இருப்பார்
தோழருடன் தோழராய்ச்
சங்கமித்த திருமுகம்
இறையும் திருமறையும்
இருவிழிகளில் ஏந்தினர்
கறையிலாப் பேரொளியாய்
உலகிலே எழுந்தனர்
எதிரியும் துளிகூட
குறைகூற மாட்டான்
எந்தையின் நேர்மையில்
எந்தவோர் பழுதுமில்லை
அகந்தை அகற்றி
அன்பினை வளர்த்தார்
ஆதரவாய் யாவர்க்கும்
இன்சொல் உரைத்தார்
மகத்தான அதிகாரம்
மாண்புமிகு செல்வாக்கு
இறுதிக்காலம்வரை எம்பெருமான்
எளிமையைத்தான் கடைப்பிடித்தார்
வலிமைமிகு வல்லரசதிபர்
வாழ்ந்த வாழ்க்கையிலே
வானளவு பணிவு
வழியெல்லாம் வறுமை
உலகமே துச்சம்
மறுமையின் அச்சம்
மஹ்ஷரும் சொர்க்கமுமே
மாநபியின் நோக்கம்
சொல்லடிகளால் சோதனை
கல்லடிகளால் வேதனை
சொல்லொணாக் கொடுமைகள்
சதாகாலமும் பொறுமையாய்
சற்குணவேந்தர்
நற்குணங்களின் தாயகம்
நம் நபிகள் நாயகம்
சிந்தையில் மீட்டுவோம்
சீரியவாழ்க்கையைப் போற்றுவோம்
அண்ணலெம் நபிகள்
1.2K
previous post