மனம் விரும்பும் தேவைகளுக்கு அத்தியாவசியமான செலான் கார்ட்ஸ், அனைத்து பாடசாலைக் கட்டணக் கொடுப்பனவுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட புத்தகசாலைக் கொள்வனவுகளுக்கு 3 மாத 0% வட்டிவீதத்தில் இலகுக் கொடுப்பனவுத் திட்டங்களை அறிமுகம் செய்ததன் ஊடாக குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதுமையான முன்னெடுப்பொன்றை ஆரம்பித்து வைத்தது.
இந்த புதிய சலுகையுடன், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் பொருளாதாரச் சுமையை தளர்த்துவதற்கு செலான் கார்ட்ஸ் முயற்சிப்பதோடு, ஒவ்வொரு பிள்ளையும் தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது. இந்த 0% வட்டிவீத இலகுக் கொடுப்பனவுத் திட்டங்கள், தமது செலவுகளை குடும்பங்கள் சிறப்பாகக் கையாளுவதற்கு ஊக்குவிக்கும் அதேவேளை மாணவர்களின் கல்விசார் வெற்றிகளுக்கு அவசியமான கருவிகளைப் பெற்றுத்தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
செலான் வங்கியின் வாடிக்கையாளர் வங்கிச்சேவை பிரதி பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன குறிப்பிடும்போது, “எதனையும் முற்றிலும் மாற்றியமைக்கும் கல்வியின் ஆற்றல் மற்றும் பிள்ளையொன்றின் எதிர்காலத்தை உருவாக்குவதில் அதன் இன்றியமையாத தாக்கத்தின் மீது செலான் கார்ட்ஸ் மனப்பூர்வமான நம்பிக்கை கொண்டுள்ளது. வெறுமனே ஒரு நிதித்தீர்வாக மட்டுமன்றி, ஒவ்வொரு பிள்ளையின்; கனவுகளுக்குமான எமது மெய்யான அர்ப்பணிப்பின் ஓர் உருவகமாக இந்த 0% வட்டி இலகுக் கொடுப்பனவுத் திட்டங்களை அறிமுகம் செய்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என்று தெரிவித்தார்.