நிலைபேறான ஊழியர் அனுபவங்களில் சர்வதேச தரங்களை பேணுகின்றமைக்காக, காபன் நடுநிலை சான்றிதழ் பெற்றதும், நாட்டின் முன்னணி அலைவு நெளிவான பொதித் தீர்வுகள் உற்பத்தியாளருமான Ex-Pack Corrugated Cartons PLC, இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்கள் வரிசையில், சிறியளவிலான பணியிடங்கள் பிரிவில் ஐந்தாமிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.
ஐந்தாவது தடவையாக இந்த கௌரவிப்பு Ex-Pack நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், ஊழியர் நலன் மற்றும் ஆரோக்கியமான பணியிட கலாசாரத்தை பேணுதல் போன்றவற்றில் நிறுவனம் காண்பிக்கும் முன்னுரிமையான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆசியாவில் சிறிய மற்றும் நடுத்தரளவு பிரிவில் பணியாற்றுவதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாகவும் Ex-Pack கௌரவிக்கப்பட்டிருந்தது.
களனியில் அமைந்துள்ள நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலையில் 300 உறுதியான பணியாளர்கள் காணப்படுவதுடன், நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய சிவில் யுத்தம் முதல் கொவிட் தொற்றுப் பரவல் மற்றும் பொருளாதார தளம்பல்கள் நிறைந்த நெருக்கடியான சூழல்களிலும், இவர்கள் நிறுவனத்தின் மீதான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி பணியாற்றி வருகின்றனர். அணியினர் படிப்படியாக உறுதித் தன்மையை வெளிப்படுத்தி செயலாற்றி வருகின்றனர். நிறுவனம் அனைவரினதும் கருத்துக்களுக்கும் செவிமடுக்கும் கொள்கையை பின்பற்றுவதுடன், தற்போது கொண்டுள்ள நிறுவன கலாசாரத்தில் இது மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது.