1.4K
கானகத்திலாடும் மயிலாய்
கானத்தில் நீ தாலாட்டாய்
சோகம் தீர்க்கும் தாய் மடியாய்
சேர்வதெப்போ நீ என்னுயிராய்
வாசம் வீசும் மலராய்
வானம் தேடும் நிலவாய்
நோய் தீர்க்கும் தேனாய்
நான் காணும் காதல் தேவதையாய்
அழைக்கின்றேன் கனவிலும் உன்னை
அழைகின்றேன் காதலுக்குள் நானே
எப்போ வந்து சொல்லப் போறாய் காதலை
என்று நீ தரப் போறாய் மன ஆறுதலை
வந்து விடு எனக்குள்ளே
வாழ்க்கை சிறக்கும் நமக்குள்ளே
என்றும் எனக்குள் நீதானடி
என் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு..!