அகிலத்துக்கே அருட்கொடையாய்
வந்துதித்த வள்ளலே நாயகமே
திங்கட் கிழமை காலைப் பொழுதினிலே
ரசூலுல்லாஹ்பிறக்கின்ற வேளையில்
சுவர்க்கத்து ஊருலீன்கள்
சூழ்ந்து கொண்டனரே
மலக்குகளின் தக்பீர் வானைபிளந்தது
அன்டசராசரம் தஸ்பீஹ் முழங்கின
சிரமம் இல்லாமல் பிறந்த நபியவர்கள்ை
சுஜூது செய்தவர்களாக
முகம் பளபளக்க பிரகாசம் பெற்று
கஸ்தூரி மனம் கமழும் உடலுடன் மின்னும்
தாரகையாக கலிமா விரலை உயர்த்தியவர்களாக
புன்சிரிப்புசிரித்தவர்களாக
கண்களில் சுர்மா இட்டவர்களாக
புனித மக்காவில் ரபிஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டில்
பூமான் நபி அவர்களின் பிறப்பு
அதுதான் நாம் கொண்டாடும்
மீலாதுன் நபியின் சிறப்பு
மக்கா நகரில் மங்கா
மண்ணில் மலர்ந்த மாநபி
சீரிய நல்வழியைக்
காட்டித் தந்த கருணை மாநபி
தலைமுறைகள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வந்த
உலகமே போற்றிப் புகழும் எங்கள் மாநபி
மக்கள் இதயத்தில் எழிலாகத் திகழ்ந்தார்
அருளும் பெருகவே ஆற்றல் தளைக்கவே
அருமை நபி பிறந்தார் வானோர் வாழ்த்திட
வையகம் போற்றிட நம் வள்ளல் நபி பிறந்தார்
வான் வழி வந்த அல்லாஹ்வின்
வொஹி, போதனைகளை வேதமாகி
அஞ்ஞான இருளை வையகத்தில் நீக்கி
மெஞ்ஞான ஒளியை அகிலத்தில் பரப்பி
விஞ்ஞான் புகட்டி அற்புதங்கள் காட்டி
வித்தகராய் வந்துதித்தார் விந்தை மிக்க மாநபி
எந்த இருளிலும் எங்கள் நபி சென்றாலும்
ஒளியாக இருப்பார்கள் எம் பிரகாச நபி
அண்ணலின் மேனியின் நிழல் கூட முன்வர மறுக்கும்
நிழலில்லா மனிதராம் நிஜமான புனிதராம்
நிகரில்லா நபி நாதராம்
இனிதாக இல்லமெங்கும் இன்பம் பொங்கிட
உறவுகள் யாவும் கூடி மகிழ அகமெங்கும்
சந்தோஷம் நிறைக்க வருடம் ஒருமுறை
வந்தாலும் வசந்தம் பொழியும் மீலாதுன் நபி
வாழ்த்துக்கள் அனைவருக்கும்