Home » “காதலிக்க எனக்கு நேரமில்லை”

“காதலிக்க எனக்கு நேரமில்லை”

by Damith Pushpika
September 24, 2023 6:56 am 0 comment

பலே வெள்ளைய தேவா படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர், தான்யா ரவிச்சந்திரன். ‘கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக அடாவடி நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து ‘மாயோன்’, ‘நெஞ்சுக்கு நீதி’, அகிலன் போன்ற படங்களில் நடித்து விருப்பத்துக்குரிய நடிகையாக உயர்ந்துள்ளார். ‘தான்யா நான் உன் பேன்யா…’ என்று ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் மந்தாரப்பூ சிரிப்பழகியான தான்யா, பழம்பெரும் நடிகர் மறைந்த ரவிச்சந்திரனின் பேத்தியும் ஆவார். தாத்தா நடிப்பை பார்த்து ஈர்க்கப்பட்ட தான்யா, தனித்துவ நடிப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இமேஜை குறுகிய காலத்திலேயே அடைந்திருக்கிறார். அணியும் உடைக்கே அழகு சேர்க்கும் பதுமையாய் வலம் வரும் தான்யா ரவிச்சந்திரன், நட்சத்திர பேட்டிக்கு மனம் திறந்தார். அதன் விவரம் வருமாறு:-

இயல்பாகவே தான்யா எப்படிப்பட்டவர்?

நான் ரொம்ப வெளியே போய் ஊர் சுத்த மாட்டேன். வீட்ல இருக்குறதுதான் பிடிக்கும். பிரண்ட்ஸ் வீட்டுக்கு போவேன். அவங்க என் வீட்டுக்கு வருவாங்க, அவ்வளவுதான். அப்புறம் நான் ரொம்ப ஸ்டிரைட் பார்வர்டு. இதுதான் நான்.

8 ஆண்டு கால சினிமா பயணம் கற்றுத்தந்தது என்ன?

பொறுமை தேவை அப்படிங்கிற விஷயத்தை கத்துக்கொடுத்துருக்கு.

தாத்தாவிடம் (ரவிச்சந்திரன்) இருந்து கற்றது என்னவோ?’

கடின உழைப்பு, நேரம் தவறாமை. அவரை மாதிரிதான் நானும். குறிப்பிட்ட டைம்ல ஷூட்ல இல்லைனா, எனக்கே ஒரு மாதிரியா இருக்கும்.

என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

‘பி.பி.180’ படத்துல நடிக்கிறேன். இது ஹீரோயின் ரோலுக்கு முக்கியத்துவம் கொடுக்குற படம். இன்னொரு தமிழ் படத்துல நடிக்கவும் அக்ரிமெண்ட் சைன் பண்ணிருக்கேன். 2 படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை போய்க் கிட்டு இருக்கு.

நீங்க நாட்டியத்தில் பெரிய ஆளாமே?

அப்படினு நான் சொல்லலியே… சின்ன வயசுல இருந்தே நான் கிளாசிக்கல் டான்சர். 15 வருஷமா நிறைய புரோகிராம்ஸ் பண்ணிருக்கேன். என் தங்கச்சி அபராஜிதா கூட சேர்ந்து நிறைய ஷோ பண்ணிருக்கேன். அபராஜிதா இப்போ அமெரிக்காவுல இருக்கா. எம்.எஸ். முடிச்சுட்டு வேலை பாத்துக்கிட்டு இருக்கா.

டான்ஸ் மையப்படுத்தி ஒரு படம் நடிப்பீங்களா?

கண்டிப்பாங்க… எனக்கு சூட் ஆகுற மாதிரி இருந்தா ஓகே தான்.

உங்கள் தாத்தா ‘கலைச்செல்வம்’ ரவிச்சந்திரன் நடித்த படங்களில் பிடித்த படம் எது ?

“காதலிக்க நேரமில்லை” தான்.

உங்களுக்குமா…?

புரியுது…. இப்போதைக்கு இல்ல.

ஏன் காதல் பிடிக்காதா?

யாருக்கு தான் பிடிக்காது. இப்போ வேண்டாமே….

பிரீடைமில் உங்கள் பொழுது போக்கு…?

லக்சி, மீலா கூடவே இருப்பேன். ரொம்ப யோசிக்க வேண்டாம். அது என் னோட ‘ஹஸ்கி பெட்டிஸ்’, (நாய்களை சொல்கிறார்). அப்புறம் டி.வியில் படம் பார்ப்பேன். பேமிலிகூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். தேவைப்பட்டா வெளியே போவேன். அதுவும் ரொம்ப ரேர் தான்.

உங்களுக்கு எடுப்பா இருக்கும் உடை சேலையா, சுடிதாரா?

சிலர் சேலை நல்லா இருக்குனு சொல்வாங்க. சில பேரு மாடர்ன் டிரஸ்னு சொல்வாங்க… எனக்கு எல்லா டிரஸ்களும் பிடிக்கும்.

ஆளை பார்த்தால் மும்பை லுக்கில் இருக்கிங்களே?

(சிரிக்கிறார்) அது தெரியல.. நான் பிறந்தது திருச்சி, வளர்ந்தது சென்னைதான்.

வாழ்க்கைக்கு தேவையான விஷயம் என்றால் எது?

சந்தோஷம்தான் தேவை.

கதையெல்லாம் எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

நானும், அம்மாவும் கதை கேட்போம். அப்பாகிட்ட அட்வைஸ் கேப்பேன். எல்லோரோட கருத்தையும் கேட்பேன். ஆனா முடிவு நான்தான் எடுப்பேன்.

தவறவிட்டு வருத்தப்பட்ட படங்கள் இருக்கிறதா?

2, 3 இருக்கு. ஆனா அத சொல்ல முடியாதே… (நக்கல் செய்கிறார்)

உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நல்லதோ, கெட்டதோ உண்மையா இருந்தா எடுத்துக்கலாம். பொதுவா விமர்சனத்தை பத்தி கேர் பண்ணக் கூடாது. சில மீம்ஸ் நமக்கு சிரிப்ப கொடுக்கும். ஆனா நாம டென்ஷனா இருக்கும்போது, சில விமர்சனம் கண்ணுல பட்டுச்சுனா காண்டு (கோபம்) ஏறிடும்.

சென்னையில் பிடிச்ச இடம் என்றால் என்ன?

நான் சுத்தி பாக்கலாம் வெளியே போக மாட்டேன், சாப்பிடத்தான் போவேன், பீச்சோரமா கிடைக்கும் மசாலா கடலை எனக்கு ரொம்ப பிடிக்கும். சூட்டிங்ல இருக்கும்போது எங்கேயாச்சும் மசாலா வடை வாசனை வந்துச்சுன்னா போதும், எப்படியாவது வாங்கச் சொல்லி சாப்பிடுவேன். எனக்கும் பசிக்கும்ல…

ஆளை பார்த்தால் அப்படி தெரியலையே…?

டயட் இருக்கு, அளவா சாப்பிடுவேன். ஆனாஒர்க்அவுட் (உடற்பயிற்சி) பண்ணுவேன்.

உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கிறதா?

ஸ்கூல் படிக்கும்போது டாக்டர் ஆகணும், அமெரிக்கா போகணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா தாத்தா நடிப்பை பாத்து சினிமா ஆசை ஒட்டிக் கிச்சு. தாத்தா நடிச்ச படத்தை மிஸ் பண்ணாம முதல் ஷோ பாத்துடுவேன். தாத்தாவே ஒருதடவை என்கிட்ட, ‘உனக்கு சினிமால நடிக்க ஆசை இருக்கானு கேட்டாரு. நான் ஓகேனுதான் சொன்னேன். அம்மாதான் வேண்டாம்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டாங்க, அம்மாகிட்ட சண்டை போட்டு அடம்பிடிச்சேன். காலேஜ் முடிச்சுட்டு நடிக்கப் போன்னு சொன்னாங்க.

பள்ளி-கல்லூரி கால காதல், கீதல் ஏதாவது?

ஸ்கூல் சமயத்துல ஒண்ணுமில்ல. படிச்ச காலேஜும் லேடிஸ் காலேஜ்.

அப்புறம் எப்படி? வேறு எங்குமே போனதில்லையா… யாருமே உங்களை பார்த்ததில்லையா… இம்பிரஸ் செய்தது இல்லையா?

“மேபி” நான் பார்க்கல. ஆனால் சிலர் சுத்தி சுத்தி வந்துருக்காங்க. யாரும் வந்து என்கிட்ட பேசல, காலேஜ் விட்டா வீடு. வீடு விட்டா காலேஜ். அவ்வளவுதான்.

ஓ… அப்போ ‘சாமி’ படத்தில் வரும் திரிஷா கேரக்டரா நீங்கள்?

அந்தளவுக்கெல்லாம் இல்லங்க… காலேஜ் கட் அடிக்கனும்னு தோனுச்சுனாலும் வீட்டுக்குத்தான் வருவேன். இல் லைனா பிரண்ட்ஸ் வீட்டுக்கு போவேன்.

மறக்க முடியாத விஷயம்…?

காலேஜ் படிக்கும்போது மாடலிங் போகனும்னு ஆசை, யாருக்கும் சொல்லாம என் பிரெண்ட் எடுத்த ஷார்ட் பிலிம்ஸ்ல நடிச்சுட்டு வந்துடுவேன். அதில் கிடைக்கும் காசை வச்சு போட்டோஸ்ஹூட் பண்ணுவேன். இப்படி நான் சினிமா மேல ஆசைப்படுறத பாத்த அம்மாவும், அப்பாவும் ‘சரி போய் நடி’ன்னு சொன்னதுதான் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத விஷயமா பாக்குறேன்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division