நாக சைதன்யாவுக்கு 2-வது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். தற்போது தசை அழற்சி நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுபற்றி சமந்தாவிடம் கேட்டபோது, ‘இதுபற்றி யோசிப்பது எனக்கு தேவையில்லாத ஒன்று’, என்று பதிலளித்து இருந்தார். தற்போது நாக சைதன்யாவுக்கு 2-ஆவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மணப்பெண் ஒரு பெரிய வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்த வருட இறுதிக்குள் நாக சைதன்யாவின் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் நாக சைதன்யா குடும்பத்தில் இருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.