இலங்கையின் முன்னணி ஆண்களுக்கான ஆடை வர்த்தக நாமமான ஹமீடியா, இலங்கையின் சுற்றுலா பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வெள்ளவத்தை கடற்கரையில் “வெல்ல பீச் மேம்படுத்தல்” (Wella Beach Upgrade) என்ற தலைப்பில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தின் ஒரு கட்டமான “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்” (Re-Build Sri Lanka) எனும் இந்த முயற்சியானது ஹமீடியாவின் CSR பிரிவான Lifeworth மற்றும் பங்காளி நிறுவனங்களான Sri Lanka Life Saving மற்றும் Rainbow Swimming என்பனவற்றால் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.
வெள்ளவத்தை கடற்கரை அதன் அழகிய, நீல வர்ண நீர் மற்றும் தங்கநிறமான மணலைக் கொண்ட இலங்கையின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாகும். குடும்பங்கள், கடற்ரையில் தங்கள் பொழுதைக் களிக்க விரும்புவோர், சாகசப் பயணிகள், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரும் இங்கு வருகின்றனர். கடற்கரை உணவகங்கள், உடை மாற்றும் அறைகள், குளியலறைகள் போன்ற பல பயனுள்ள வசதிகளை இது வழங்குகிறது, இது கடற்கரைக்கு வருவோரை தெள்ளத்தெளிவான கடல்நீரில் நீந்தவும் கடற்கரை மணலில் விளையாடி மகிழவும் வாய்ப்பளிக்கின்றது.
சுற்றுச்சூழலுக்கு அர்ப்பணிப்புள்ள ஒரு பொறுப்பான அமைப்பாக ஹமீடியாவின் கடற்கரை சுத்தப்படுத்தும் முயற்சி அதன் ஊழியர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மனப்பான்மையை வளர்க்கிறது. எனவே, இந்நிகழ்வு ஹமீடியா ஊழியர்களையும் பங்காளி நிறுவனங்களின் உறுப்பினர்களையும் ஒன்றிணைக்க உதவியதுடன், நாட்டின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கான அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் வழங்கியது.