1.7K
தேடித் தொலைந்த
வெறுமைகளைப்பற்றி,
உணர்ச்சியற்று திரும்பிய
அன்பினைப் பற்றி,
காய்ந்து வற்றிப்போன
காதல் சேதிகளைப்பற்றி,
உதறித்தள்ளிய
காலக்கொடுமைகளைப் பற்றி
——-பிடிமானத்தை அறுத்தெறிந்த
சக மனிதர்களைப்பற்றி,
முட்டி மோதி சிக்கித் தவித்த
உள்ளுணர்வுகள் பற்றி,
நிர்க்கதியற்று தவித்த நீங்கா
நினைவுகள் பற்றி,
திரும்பத் திரும்ப நினைத்து
மனம் வேதனைப்படுவதில்
யாருக்கென்ன லாபம்…
– ஷிமாம் முஸ்தாக்.
கருங்கொடித்தீவு