உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதினால் இந்த விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் தொடர்பாக தாம் ஆராய்வதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனீவா சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், கடந்த வியாழன்வரை வொஷிங்டனில் தங்கியிருந்த அவர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக், அமெரிக்க திறைசேரி அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை நடத்தியுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் மற்றும் எம்.ஏ.சுமந்திரனுக்கிடையில் கடந்த வியாழன் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அண்மையில் சனல் -4 செய்திச் சேவையினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழப்பு
சர்வதேச விசாரணை குறித்து USA ஆராய்வு
1.6K
previous post