ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23ஆவது வருட நினைவுதின நிகழ்வுகள் அட்டாளைச்சேனையில் நேற்று (16) நடைபெற்றன. மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் காலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஞாபகார்த்த உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மு.கா. வின் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதி தலைவர் அப்துல் கபுர், பிரதி செயலாளர் நாயகம் மன்சூர் ஏ.காதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் மர்ஹும் அஷ்ரப்பின் நினைவுதின நிகழ்வு வம்மியடி வீதியில் அமைந்துள்ள மஸ்ஜீதுஸ் ஸரீப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை விசேட, பாலமுனை தினகரன் நிருபர்கள்