அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் (லேக்ஹவுஸ்) நிறுவனத்தின் நீண்ட கால சேவை விருது வழங்கும் விழா நிறுவனத்தில் செப்டெம்பர் 14ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கலந்து கொண்டிருந்ததோடு, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது லேக்ஹவுஸ் நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்காக சிறப்பு பணியாற்றிய ஐந்து ஊழியர்களுக்கு நீண்ட சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வாறு நீண்ட சேவை விருதுகள் பெற்றுக் கொண்டவர்களுள் 29 வருடகால சேவையினைப் பூர்த்தி செய்த ஆசிரியர்பீட நிர்வாகப் பிரிவின் டப்ளிவ். ஏ. ஆர். பீ. விஜயலத், பராமரிப்பு பிரிவில் 28 வருடகால சேவையினை நிறைவு செய்துள்ள எச். ஏ. நந்தசேன, கண்டிக் கிளை அலுவலகத்தின் கே. எஸ். குமார, அச்சுப் பிரிவின் எம். வீ. பி. விஜேவீர மற்றும் என். பீ. ஏ. எல். ஐ. நாமரத்ன ஆகியோர் இதன் ேபாது கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோன்று 51 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சண்டே ஒப்சர்வர் பத்திரிகையின் பென் ரோச்சும் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் 2021ம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களாக சிறப்பு விருது பெற்ற லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு விருது பெற்றுக் கொண்டவர்கள், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் மற்றும் சிலுமின பத்திரிகையின் ஆசிரியர் தர்மன் விக்கிரமரத்ன ஆகியோருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் காணலாம்.
மேலுள்ள வலது பக்கப் புகைப்படத்தில் காணப்படுவது சிறப்பு ஊடகவியலாளர் விருதினைப் பெற்றுக் கொண்ட சிலுமின ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த சுரேகா நில்மினி இளங்கோன் சமீபத்தில் எழுதிய ‘திய சித்தம்’ என்ற நூலின் முதல் பிரதியை நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கு வழங்கிய சந்தர்ப்பமாகும். ‘திய சித்தம்’ என்ற நூல் அதன் ஆசிரியர் சுரேகா நில்மினி காரியவசத்தினால் எழுதப்பட்ட 17வது நாவலாகும்.
இந்நிகழ்வில் லேக்ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் மூத்த ஊடகவியலாளர் சிசிர பரணதந்திரி, சட்டம் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜனக ரணதுங்க, செயற்பாட்டுப் பணிப்பாளர் சட்டத்தரணி மஞ்சுள மாக்கும்புர, நிதிப் பணிப்பாளர் கலாநிதி சுனில் நவரத்ன, பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல, தினமின பத்திரிகையின் ஆசிரியர் மனோஜ் அபயதீர, டெய்லி நிவூஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜயந்த ஸ்ரீ நிஸ்ஸங்க, தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தேவதாசன் செந்தில்வேலவர், சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையின் ஆசிரியர் பிரமோத் டி சில்வா உள்ளிட்ட லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
எம். எஸ். முஸப்பிர்