1.6K
கல்வியமைச்சிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை
பாடசாலை நேரத்தை காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நீடிப்பதற்கான யோசனையொன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார். காலியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். பாடசாலை மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.