தேசப்பிரியவுக்கு புதிய பதவியை வழங்கிய அரசு | தினகரன் வாரமஞ்சரி

தேசப்பிரியவுக்கு புதிய பதவியை வழங்கிய அரசு


தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக 05 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றை பிரதமர் தினேஷ் குணவர்த்தன நியமித்துள்ளார்.

இந்த குழுவை நியமித்து அதிவிசேட வர்த்தமானி ஒன்றையும் பிரதமர் நேற்று வெளியிட்டுள்ளார்.
இதன்படி தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய செயற்படவுள்ளதுடன் உறுப்பினர்களாக ஜயலத் ஆர்.வி.திஸாநாயக்க, திருமதி டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே. தவலிங்கம், ஐ.ஏ.ஹமீத் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

Comments