நோயாளிகளுக்கு இலவச போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தும் நவலோக மருத்துவமனை குழுமம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

நோயாளிகளுக்கு இலவச போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தும் நவலோக மருத்துவமனை குழுமம்

முன்னோடி சுகாதார சேவைகள் வழங்குநரான நவலோகா மருத்துவமனைக் குழுமம், நோயாளர்களின் நலனையும் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் கருத்தில் கொண்டு அதற்கு நிவாரணம் அளிக்கும் ஒரு முயற்சியாக, வெளி நோயாளர் பிரிவு (OPD), கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நோயாளிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதற்கும் இலவச போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்துவதாக அண்மையில் அறிவித்துள்ளது.

தற்போது, ​​போக்குவரத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் நாட்டில் COVID நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல நோயாளிகள் தங்கள் சுகாதாரத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், இந்த முயற்சி மிகவும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நோயாளர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கவும் நவலோக வைத்தியசாலை குழுமம் செயற்பட்டு வருகின்றது.

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையால், பலர் மருத்துவரிடம் செல்லவோ, மருத்துவமனைக்கு செல்லவோ விரும்புவதில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நோயாளிகள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையை சரியான நேரத்தில் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்தச் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.”"நோயாளிகளுக்கு எப்போதும் முதலிடம் கொடுக்கும் பொறுப்பான தனியார் சுகாதார சேவை வழங்குநராக, நவலோக மருத்துவமனைகள் குழு இந்த சவாலான சூழ்நிலையை வலிமையுடன் எதிர்கொண்டு நோயாளிகளின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என நவலோக மருத்துவமனை குழுமத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ரசிக திலகரத்ன தெரிவித்தார்.

Comments