பருப்பு, கோதுமை மா, சீனி, பல பொருட்களின் விலைகள் குறைப்பு | தினகரன் வாரமஞ்சரி

பருப்பு, கோதுமை மா, சீனி, பல பொருட்களின் விலைகள் குறைப்பு

புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி, கோதுமை மா உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன.
 
கடந்த சில தினங்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை 350 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் மொத்த விலை 225 ரூபாவாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய பண்ட இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை நேற்று 250 ரூபாவாக குறைந்துள்ளது.
 
கோதுமை மாவின் விலை பல தடவைகள் குறைக்கப்பட்ட போதிலும், பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை இதுவரை குறைக்கவில்லை.
 
ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
எனினும் தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோ 250 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை குறைப்பதற்காகவும் கோதுமை மாவின் விலையை குறைப்பதற்காகவும், வர்த்தக அமைச்சு புதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளது. இதற்கமைய நாளை 31 ஆம் திகதி வரை கடன் சான்று பத்திரமின்றி நேரடியாக பணம் செலுத்தி கோதுமையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

Comments