நீதிமன்ற உத்தரவு சிக்கலை தீர்த்து தடைகளைத் தாண்டி USA சென்ற ரஞ்சன் | தினகரன் வாரமஞ்சரி

நீதிமன்ற உத்தரவு சிக்கலை தீர்த்து தடைகளைத் தாண்டி USA சென்ற ரஞ்சன்

சிங்கள திரைப்பட தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று அதிகாலை அமெரிக்கா பயணமானார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். ரஞ்சன் ராமநாயக்க, அமெரிக்காவுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். வெளிநாடு செல்ல அவருக்கு விதிக்கப்பட்டிருந்தநீதிமன்ற தடை உத்தரவு காரணமாக விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கவில்லை.

இந் நிலையில், நேற்று முன்தினமே நீதிமன்றம் தொடர்பான அந்த சிக்கலை தீர்த்துக்கொண்டு நேற்று அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.. ரஞ்சன் ராமநாயக்க நடித்து வெளியாகியுள்ள ‘கேம்’ என்ற சிங்கள திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்படவுள்ளது. அது தொடர்பான நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

Comments