டாக்டர் APJ அப்துல் கலாம் | தினகரன் வாரமஞ்சரி

டாக்டர் APJ அப்துல் கலாம்

இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் மறைந்த டாக்டர் APJ அப்துல் கலாம்.

இளைஞர்களே எதிர்கால இந்தியாவினை மாற்றுவார்கள் என்று கூறி அதுமட்டுமின்றி நான் என்னால் முடிந்த உயரத்தினை பார்த்துவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை விட உயரத்தை பார்ப்பீர்கள் அதற்காக கனவு காணுங்கள் என்று சொல்லி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திழந்தவர் கலாம்.இறக்கும் வரை திருமணம் செய்யாமல் நாட்டிற்காக உழைத்த ஒப்பற்ற மனிதர்.

அப்துல் கலாம் தமிழகத்தின் எல்லையான ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய தந்தை மீனவதொழிலினை அடிப்படையாக கொண்டவர். எனவே தனது தந்தையின் பாரத்தினை குறைக்க செய்தித்தாள் போடுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்து தனது குடும்பத்திற்கு அவரது பங்களிப்பை தந்தார்.

தந்தை சாதாரண குடும்பத்தை சார்ந்தவர் என்பதனால் அவரை ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். அவரது பள்ளிப்படிப்பு காலத்தில் கலாம் ஒரு சராசரி மாணவராகவே திகழ்ந்தார். ஆனால், இவரிடம் ஒரு திறமை இருந்தது அது என்னவென்றால் மதிப்பெண் மீது நம்பிக்கை இல்லாத இவர் நடைமுறையில் தான் கற்றவற்றை சிந்தித்து பயன்படுத்தும் புத்தி வாய்ந்தவர். இந்த யோசனை திறனே இவரை பிற்காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற்றியது. தனது பள்ளிப்படிப்பினை முடித்த இவர் கல்லூரி படிப்பிற்காக திருச்சியில் இயற்பியல் துறையில் சேர்ந்தார். ஆனால் அவர் அதனை படிக்கும்போதே இந்த துறை நமக்கு சரிவராது.விண்வெளி அறிவியலை பற்றியே எந்நேரமும் நினைத்துக்கொண்டிருந்த அவர் இயற்பியல் துறையில் அவரது இளங்கலை பட்டத்தினை 1954ஆம் ஆண்டு பெற்றார்.சென்னையில் 1955ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் படிப்பில் சேர்ந்தார். பிறகு அந்த பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் முதலில் 1960ஆம் ஆண்டு புது டெல்லியினை தலைமையிடமாக கொண்ட DRDO [DRDO – Defence Research Development Organisation] என்ற வானூர்தி அபிவிருத்தி பிரிவில் சேர்ந்து பணியாற்ற துவங்கினார். இந்த நிலையில் இவர் இந்திய இராணுவத்திற்காக ஒரு சோதனை ஹெலிகாப்டரினை தயார் செய்து கொடுத்தார்.பிறகு தனது உழைப்பு மற்றும் திறமை காரணமாக அவர் 1969ஆம் ஆண்டு [ISRO- Indian Space Research Organisation] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்தார். அவர் இங்கு செயற்கைகோள்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை வடிவமைக்கும் பிரிவில் சேர்ந்தார்.

ISROவில் [SLV -III ] என்ற செயற்கைகோளினை விண்ணிற்கு ஏவும் ஒரு ராக்கெட்டினை வடிவமைக்கும் குழுவிற்கு தலைவரானார். இந்த ராக்கட்டினை வடிவமைக்கும் காலமே கலாமின் வாழ்வில் பிடித்த நாட்கள் என்று அவரே தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு விண்வெளி குறித்த ஆய்வினை அவர் விரும்பி செய்துள்ளார். SLV – III ஏவுகணை “ரோகினி” என்ற செயற்கைகோளினை தாங்கி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. மேலும் அது வரையறுக்கப்பட்ட பாதையில் வெற்றிகமாக சென்று இலக்கினை அடைந்தது. இந்த வெற்றி இந்தியாவை மற்ற நாடுகளின் பார்வை படும் அளவிற்கு திருப்பியது.பொக்ரான் அணுஆயுதங்களை இந்தியாவும் செய்யும் என்று நிரூபித்து காட்டினார் கலாம்.

என்.கே.எம். ஜசீல் / பாதிமா,
கொழும்பு

Comments